வகைப்படுத்தப்படாத

மின்சாரத் துண்டிப்புப் பற்றி அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புப் பற்றி அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.

1987 என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையை தொடர்புகொள்ள முடியும்.

இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் 1910 ஆகும்.

வலுசக்தி அமைச்சை 1901 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம்.

தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று லட்சத்து 36 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பில் தீவிரமாக பரவி வரும் டெங்கு

இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் – பிரதமர்

தொடரூந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்