உள்நாடு

மின்கட்டண முறையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தத்தின் போது மத ஸ்தலங்களில் அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று(ஒக்டோபர் 8) அஸ்கிரிய பீடத்தின் பிரதான தலைவர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரதன தேரரை நேரில் சந்தித்து மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் தெரிவித்ததன் பின்னர், அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பொது நோக்கத்தின் கீழ் அறநிலையத்துறை நிறுவனங்கள் அந்த அடிப்படையில் நீக்கப்பட்டு உள்ளடக்கப்படும். அதன்படி, தற்போது 550% அதிகரித்துள்ள தொண்டு நிறுவனங்களுக்கான அமைப்புகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுநோக்கு பிரிவில் ஒரு யுனிட்டுக்கு வசூலிக்கப்படும் விலை ரூ.32.

மேலும், அதிகரிக்கப்பட்ட கட்டணத்தில் 50% குறைக்கும் முறைமை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர – கோட்டாவின் காலத்தை மறந்துவிட வேண்டாம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor

மதுவரித் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்