உள்நாடு

மின் தொடர்பில் இன்று மீளவும் பரிசீலனை

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று(27) மீண்டும் பரிசீலிக்கவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இன்று வரை மின்வெட்டு அமுலாக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூன்று அனுமானங்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு 2 முதல் 9 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு, இலங்கை மின்சார சபை, ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.

தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் மற்றும் அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் குறித்த தகவல்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

கொழும்பில் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு – காரணம் வெளியாகியது !