உள்நாடு

மினி இராணுவ முகாம் அகற்றம்

(UTV | கொழும்பு) –

நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம் அகற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியில் குறித்த முகாம் அமைந்திருந்ததுடன் அம்முகாமில் இருந்து செயற்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருந்தனர்.

தினமும் வீதி ரோந்து மற்றும் தற்காலிக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இம்முகாம் இராணுவத்தினர் தற்போது தமது செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி அவ்விடத்தில் இருந்து நேற்று (25) அகற்றப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கடந்த காலங்களில் இடம்பெற்றமை காரணமாக இப்பகுதியில் பல தரப்பினரின் வேண்டுகோளிற்கமைய குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சாரா ஹுல்டனுடன் அமைச்சர் காஞ்சன கலந்துரையாடல்

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு