உள்நாடு

மிச்செல் பெச்சலட் இன்று வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார்

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று முன்வைக்கவுள்ளார்.

அது தொடர்பில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன.

மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூலமான முன்வைப்புகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க உள்ளார்.

இதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நாளையதினம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்திக்க உள்ளார்.

இதற்கிடையில் இலங்கை இணை அனுசரனை வழங்கிய யோசனைகளிலிருந்து விலகி கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளார்.

Related posts

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்

ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க இடமளியுங்கள் – சஜித்

editor