அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த, கோட்டாபய ஆகியோரை சந்தித்தார்

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி சந்தித்துள்ளார்.

இது குறித்து மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி எக்ஸ் தளத்தில்,

இன்று (நேற்று முன்தினம்) பிற்பகல் கொழும்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்.

மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மிகச் சிறந்த உறவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தொடர்ந்து அமைதி மற்றும் பாதுகாப்பு, அரசியல் உட்பட பல விடயங்களை நாங்கள் மிகவும் கலகலப்பான மற்றும் சுவாரஸ்யமாக உரையாடினோம் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை (16) இப்ராஹிம் மொஹமட் சோலி முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன்போது, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசேட உறவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நாம் கூட்டாக எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘ரணிலின் செயல்கள் முட்டாள்தனமானவை’ – விஜித

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor

’20’ வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]