உலகம்

மாலியில் இராணுவ புரட்சி -ஜனாதிபதி இராஜினாமா

(UTV|மாலி) – மாலியின் ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா (Ibrahim Boubacar Keïta), தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரைச் சிறைபிடித்தனர்.

தொடர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினாலும், வியத்தகு வகையில் படையினரால் அவர் இல்லத்திலேயே தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினாலும் அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ஜனநாயக ரீதியாக மாலியின் ஜனாதிபதியாக கெய்ட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் கெஸ்டா இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றாரர்.

ஆனால் ஊழல், பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தல் மற்றும் நாட்டின் பகுதிகளில் வகுப்புவாத வன்முறை ஆகியவற்றின் காரணமாக அவருக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

Related posts

WHO பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்

காசாவில் போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்