கிசு கிசுவிளையாட்டு

மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் – ஐ.சி.சி.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் 17 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் நான்கு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது.

அந்நிலையில் இவ்வாறு மழையால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) தேவை என பங்களாதேஷ் அணியின் பயிற்சிவிப்பாளர் ஸ்டீவ் ரோட்ஸ் உட்பட பலர் கோரியிருந்தனர்.

எனினும் ஐ.சி.சி. மாற்றுநாள் என்றால் போட்டியின் கால அளவு கணிசமாக அதிகரித்து விடும். இதனை நடைமுறைபடுத்துவது என்பது மிகவும் சிக்கலானதாகும். மாற்று நாளில் மழை பெய்யாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது எனக் கூறி லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே யை வழங்க மறுத்து விட்டது.

 

Related posts

இருபதுக்கு – 20 தொடரை கைப்பற்றியது இலங்கை

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

IPL தொடர்லிருந்து விலகிய மற்றுமொரு வீரர்