கேளிக்கை

மார்வெல் முதல் முறையாக OTT தளத்தில்

(UTV | கொழும்பு) – மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் விடோ ஒரே சமயத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனம் தயாரித்து கடந்த ஆண்டில் வெளியாக இருந்த படம் “ப்ளாக் விடோ”. நடாஷா ரமணாஃப் என்ற முக்கிய பெண் உளவாளி கதாப்பாத்திரம் குறித்த இந்த படத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சனே ப்ளாக் விடோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து தற்போது இந்த படம் வெளியாக உள்ளது. மார்வெல் படங்கள் திரையரங்குகளில் வெளியான பின் நீண்ட நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் நிலையில் முதன்முறையாக ப்ளாக் விடோ திரையரங்கு மற்றும் ஓடிடியில் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளதாக மார்வெல் அறிவித்துள்ளது. இந்த படம் ஜூலை 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related posts

பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யா

இந்தியா என்ற அடிமைப் பெயர் மாற வேண்டும்

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம்