உள்நாடு

மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகன் தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

மட்டக்களப்பில் சம்பவம்,

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் நேற்று (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகளுக்கு திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இரந்துள்ள போது, மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது, மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். பின்னர், 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பிஓடியுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வேன்

அணர்த்தங்களுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor