சூடான செய்திகள் 1

மாத்தறை கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|COLOMBO)-மாத்தறை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என கருதப்படும் இளைஞர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

பின்னேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற ரவிது கிம்ஹான் என்ற 19 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குழு அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி இருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என கருதும் இளைஞன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

எவ்வாறாயினும் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக 5 விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது.

கொலை சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை மாத்தறை, வெலேவத்த பகுதியில் இருந்து நேற்று (25) பொலிஸார் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம்

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”