உள்நாடுபிராந்தியம்

மாதம்பே பகுதியில் கோர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி – மூவர் பலி

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மாதம்பே பகுதியில் பஸ் மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தலவில தேவஸ்தானத்திற்குச் சென்று மீண்டும் வந்துக்கொண்டிருந்த போதே, முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதுடன், உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மீன்களை ஏற்றிச் சென்ற லொறியுடனும், பின்னர் பேருந்து ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்குப் பிறகு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய மீன் லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்தோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல் | வீடியோ

editor