உள்நாடு

மாணவிகள் துஷ்பிரயோகம்- இராணுவ சிப்பாய் கைது

(UTV |நோர்வூட்) –  மாணவிகள் துஷ்பிரயோகம்- இராணுவ சிப்பாய் கைது

பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சந்தேகநபர், விடுமுறையில் வீடு திரும்பிய நிலையில், இரண்டு மாணவிகளை தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்போது, அவர்களில் ஒரு சிறுமி சந்தேகநபரிடமிருந்து தப்பிச் சென்ற நிலையில், அதனை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை மடக்கிபிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிகளின் தந்தை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், குறித்த சிறுமிகள் இருவரும் டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணிபுரிபவர் என்பதுடன் அவர் இன்று (15) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளிகளாக மேலும் ஐவர் அடையாளம்

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

‘சைக்கிளில் பணிக்கு வாருங்கள்’ திட்டம் திங்களன்று