சூடான செய்திகள் 1

மாணவர்கள் வெளிப்படையான புத்தக பை விசாரணைக்கு உத்தரவு

(UTV|COLOMBO) வெளிப்படையான புத்தக பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் நேற்று வருகை தந்த மாணவர்களில் வெளிப்படையான புத்தக பை இல்லாத மாணவர்களை புத்தகங்களை கையில் எடுத்து செல்லுமாறு அதன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

 

 

 

 

Related posts

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

பேரூந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுத்தால் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வோம்…