சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கு டெப் கணினி…

(UTV|COLOMBO) கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரலாற்றில் வெற்றியை நிலை நிறுத்தி இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகளை பெற்றுக்கொடுக்கும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சின் வளவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார் இது கல்வி துறையில் உன்னதமான வெற்றியாகும் என்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் இது சிறப்பான வெற்றியாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் உயர் கல்வியை கற்கும் மாணவர்களுக்கு இதன் மூலமான கல்வி நடவடிக்கைகளுக்கு ஒரு இலட்சம் டெப் கணினிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்