சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்- பெஃப்ரல் அமைப்பு

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

6 மாகாண சபைகளின் அதிகாரக் காலம் நிறைவடைந்துள்ளது.

எனினும் அவற்றுக்கான தேர்தல், மாகாண எல்லை மறுசீரமைப்பு அறிக்கை குறித்த மீளாய்வுப் பணிகள் தாமதித்துள்ளமையால், நடத்தப்படாதுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள மீளாய்வுக் குழு தமது அறிக்கையை 2 மாதங்களுக்குள் கையளிக்க வேண்டும் என்றும் பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

 

 

 

Related posts

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை