சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவரான மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சில பாதாள உலகக் குழுவினர் தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என சட்டத்தரணிகள் ஊடாக டுபாய் நீதிமன்றில் மதூஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இதுவரை நாடுகடத்தப்பட்ட நிலையில், மாகந்துரே மதூஷ் மாத்திரம் டுபாயில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

பெண்கள் மீது கத்தி குத்து தாக்குதல்

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா