கிசு கிசு

மஹேலவின் அதிரடி சீற்றம்…

(UTV|COLOMBO) இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியவை கடுமையாக விமர்சித்துள்ள மற்றொரு முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன சனத் ஜெயசூரியா ஏன் ஐ.சி.சி.யின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

சனத் ஜெயசூரியவிற்கு ஐ.சி.சி. இரண்டு வருடகால தடைவிதித்துள்ள நிலையிலேயே மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டரில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இலங்கையால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவர் ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டுள்ளமை இலங்கை கிரிக்கெட்டிற்கு துயரமான நாளாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

ஏன் ஐ.சி.சி.யின் விசாரணைகளிற்கு ஏன் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

இலங்கையில் இந்த அழகான விளையாட்டை யாராவது நேசித்தார்கள் என்றால் ஊழலில் ஈடுபடுபவர்களை அம்பலப்படுத்த வேண்டும் அதன் மூலம் அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டும் எனவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

குக் இனது கனவு அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் இவர்களா?

உலக அழகிப் பட்டத்தை திருப்பியளித்தார் கரோலின்

விடாமல் துரத்திய ரசிகரை கட்டித்தழுவி நெகிழ வைத்த தோனி (VIDEO)