வகைப்படுத்தப்படாத

மஹிந்தாநந்தவிற்கு பிணை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தநந்த அழுத்கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது.

அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், பொரளை – கிங்ஸிலி வீதியில் கணக்கில் வராத 27 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அவரால் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது அவருக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 5 லட்சம் பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கான திகதி எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் திகதி தீர்மானிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

அசாத் சாலியை வென்றால் ரோசிக்கு வாசி

இலங்கையர்களின் பொறுப்பு தொடர்பில் பிரதமர்

Nine SSPs promoted to DIG