உள்நாடு

மஹிந்தவினால் 11 கட்சித் தலைவர்களுக்கும் அவசர அழைப்பு

(UTV | கொழும்பு) – இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு வருமாறு 11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் திறமையின்மை குறித்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து உடனடியாக இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என விமல் தெரிவித்துள்ளார். வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும் பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் ? பொய்யான செய்தி கல்வி அமைச்சு

editor

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த நிறுவனங்கள்!