கேளிக்கை

மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா…

(UTV|INDIA)-`குலேபகாவலி’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள `துப்பாக்கி முனை’ படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஹன்சிகா தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது. அதேபோல் மற்றொரு போஸ்டரில் ஹன்சிகா கையில் பல்வேறு முகமூடிகளை வைத்திருப்பது போன்று தோற்றத்தில் இருக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜிப்ரான், இது நான் இசையமைக்கும் 25-வது படம் என்றும், ஹன்சிகாவுக்கு 50-வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஒரே படத்தின் மூலம் இருவரும் புதிய மைல்கல்லை தொட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://twitter.com/GhibranOfficial/status/1071659035575742464

 

 

 

 

 

 

Related posts

ஒஸ்கார் விருதுக்கு குஜராத்தி படமான ‘செல்லோ சோ’ பரிந்துரை

வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை

‘பொன்னியின் செல்வன்’ பட பாடகர் திடீர் மரணம்