உள்நாடுசூடான செய்திகள் 1

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

(UTV|கொழும்பு)- மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் டுவிட்டர் பக்கத்திலும் இந்தக்கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.

-ஊடகப்பிரிவு-

 

Related posts

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்

ஊடகவியலாளர் மஹேஸ் நிஷ்சங்க விளக்கமறியலில்

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு தாக்கல் – இரா. சாணக்கியன்

editor