சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

(UTV|COLOMBO) – நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய வானிலை நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் இராஜினாமா