சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதுதவிர, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

 

 

 

Related posts

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நாடளாவிய ரீதியில் சீரான காலநிலை

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது