சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO)-கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

மா​வனெல்ல நகரின் பாதுகாப்பு அதிகரிப்பு…

சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க 1,045 பணியாளர்கள்

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !