உள்நாடு

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு !

(UTV | கொழும்பு) –  நாளை (28 .08.2023) முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இதன்படி, நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களைக் கோரியுள்ளது.

மேலும் , நாளை தொடக்கம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை நண்பகல் 12.11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென்கொரியா – இத்தாலியில் இருந்து வந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

சாதாரண, உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை