வகைப்படுத்தப்படாத

மலைமுகட்டில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

(UTV|UGANDA)-உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா – பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

 

 

 

 

 

Related posts

මරණ දඬුවම් තීන්දුව කල් යයි

US approves Taiwan arms sale despite Chinese ire

මේ වනවිට බීමත් රියදුරන් 1500ක් අත්අඩංගුවට