கிசு கிசு

“மருந்துகள் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் நிதி அமைச்சரே பொறுப்பு”

(UTV | கொழும்பு) – அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும், மருந்துகள் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஏற்படும் குறைகளுக்கு நிதியமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related posts

எதிர்வரும் வாரமும் மின்வெட்டு தொடரும் – PUCSL

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவிற்கு எதிர்ப்பு

மெத்தியூஸ் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டார்?