உள்நாடு

 மருந்துகளை திருடி விற்றவர் கைது

(UTV | கொழும்பு) –  மருந்துகளை திருடி விற்றவர் கைது

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இருந்து மருந்துகளை திருடி விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்ட நபரை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையாளரால் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தை 21,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

இதன் பின்னர் குறித்த ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒருதொகை தடுப்பூசியும், 425,290 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தனது சேவை பெறுநர் மருந்தாளர் என்பதால், தனது வீட்டில் மருந்துப்பொருட்களை விற்பனை செய்வதாக, சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும், மருந்து விற்பனைக்கான எவ்வித அனுமதிப்பத்திரமும் சந்தேகநபரிடம் இல்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம் [VIDEO]

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி