வகைப்படுத்தப்படாத

மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவர்கள் நாளை காலை தொடக்கம் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி , முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் 24 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளரொருவர் தெரிவித்திருந்தார்.

சைட்டம் எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது காவற்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் , மருத்துவ சபைக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்வாறு மருத்துவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

විශ්වවිද්‍යාලවලට සිසුන් බඳවා ගැනීමේ කඩයිම් ලකුණු නිකුත් කෙරේ

Kandy’s iron man Niyaz Majeed – a legend in weightlifting

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம்…