உள்நாடு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுப்பு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை சுத்தப்படுத்தும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம். எம். ஹிர்பகான் தலைமையில் (30) நடைபெற்றது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முதல் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையான முறையில் பாதிப்பை எதிர்நோக்கியிருந்த மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை மீள துப்புரவு செய்யும் இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் நான்கு அடிகளுக்கு மேல் பாடசாலைக்குள் வெள்ளநீர்
உட்புகந்ததால் பாடசாலையின் கீழ் தளத்தில் இருந்த வகுப்பறைகள், அலுவலகங்கள், களஞ்சிய அறைகள், மலசலகூடங்கள் என பாடசாலையின் வளாகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையமாகவும் செயற்பட்டு வருகின்ற இப்பாடசாலையின் வகுப்பறைகள் கழுவி சுத்தம் செய்யப்பட்டதுடன் முறிந்து வீழ்ந்து கிடந்த பாரிய மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டன. இதேவேளை பாடசாலை வளாகம் பூராகவும் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளினால் புகை விசிறப்பட்டது.

கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உட்பட அரச நிறுவனங்களினுடைய ஒத்துழைப்போடு இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

Related posts

டீகோ மரடோனா காலமானார்

இரண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்