உள்நாடுவணிகம்

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு)- உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் கீழ் தம்புள்ளை பிரதேசத்தில் சில இடங்களில் பிரதேச செயலாளரின் தலைமையில் மரக்கறிகள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது.

உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இதற்கான நிதியை பொருளாதார மத்திய நிலையம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விசேட விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

editor

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு