உள்நாடு

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைபகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்ததையடுத்து பொலிஸார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மேச்சல்தரை பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அதனை நேற்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சென்று பார்வையிட்டு பொலிஸாரை கடமைக்கு அமர்த்தி கடமைகளை ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்