‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை(4) கொண்டாடப்படுகின்றது.
அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்