உள்நாடு

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர்.

இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28 வயதுடைய தாயின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

Related posts

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா