உள்நாடு

மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா!

(UTV | கொழும்பு) –

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை சனல் 4 இன் ஆவணங்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிரிவின் அதிகாரிசுரேஸ் சாலே ஐக்கியஇராச்சியத்தின் ஒளிபரப்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்த  முறைப்பாட்டை ஒவ்கொம் எனப்படும் அந்த அமைப்பு நிராகரித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவேளை சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில்  சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த வேண்டுகோள் குறித்து ஆராயுமாறு  லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் கொழும்பை கேட்டுக்கொண்டுள்ளது – இவ்வாறான சட்ட நடவடிக்கையில் தனியார் சட்டஅமைப்பொன்றை ஈடுபடுத்தினால்  அதற்காக ஐந்துமில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் செலவாகலாம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

editor

தனிமைப்படுத்தல் விதி : 50,000 ஐ கடந்த கைதுகள்

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்