உள்நாடு

மத்ரஸா பாடசாலைகளை பதிவுசெய்ய நடவடிக்கை – பிரதமர்

(UTV|கொழும்பு) – மதரஸா பாடசாலைகளை வரையறைக்கு உட்படுத்துவதற்கு உரிய முறையை ஸ்தாபித்து, பதிவுசெய்யப்படாத மதரஸா பாடசாலைகளை பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்த சாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளில் கற்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும் எனவும்
பெருமளவான மதரஸா பாடசாலைகள் பதிவுசெய்யப்படாமல் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவை பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமானது என்பதை சட்டரீதியாக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஆர்ப்பாட்டகாரர்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை : தொடர்ந்தும் பதற்ற நிலை

“பெட்ரோல் வரிசைகளில் நிற்க வேண்டாம்”

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்