உள்நாடு

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து அரச தலைவர் ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டது.

தற்போது நிலவும் நிலைமையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்கு இந்த நாடுகளின் உதவியைக் கோரிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அந்த நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

Related posts

தனியார் துறை ஊழியர்களுக்கு நற்செய்தி!

போதகர் ஜெரோம் நாடு திரும்பினால் அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் – மேர்வின் சில்வா

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு