வணிகம்

மத்தளை விமான நிலைய செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மத்தளை விமான நிலைய செயற்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரயீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தவேலைத்திட்டம் தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related posts

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

இலங்கைக்கான ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு

DPJ இன் உடனடி வேலை பூர்த்திக்கு 7 மில்லியன் வெகுமதியளித்த CSCEC