உள்நாடு

மதுவரி ஆணையாளர் நாயகத்தின் சேவையை உடனடியாக நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

குணசிறி ஒப்பந்த அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, பதில் மதுவரி ஆணையாளர் நாயகமாக யு.டி.என் ஜயவீரவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

வாய்க்காலில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

மேலும் தளர்வடைந்த ‘பயணத்தடை’