உள்நாடு

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று (01) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைது நடவடிக்கை இதுவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1057 சாரதிகள், அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த குற்றங்களுக்காக 614 சாரதிகள், அதிக வேகத்தில் பயணித்த 54 சாரதிகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 57 சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

நான் குற்றவாளியாக இருந்தால் எனக்கு மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]

COPE மற்றும் COPA குழுக்களுக்கான தலைவர்கள் இன்று நியமனம்