சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு சாரதிகள் மதுபோதையில் வாகனங்கள் செலுத்துவது காரணமாக உள்ளது.

அத்துடன் மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்கள் கைதாகின்ற நிலையில், வாகன சோதனைகளை மேலும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் விபத்துக்களை குறைக்கலாம் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்

பிரதமர் இன்று(22) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

சுற்றுலா வீசாவை அதிரடியாக தடை செய்தது இலங்கை!