சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்; இன்று விஷேட அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் இன்றைய தினம் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் மக்கள் சந்திப்பில் வைத்து அது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்திப்பு மட்டக்களப்பு – கிரான் சந்தியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் ஒரு நாள் முழுவது விவாதம் இடம்பெற்ற போது அதில்
அந்த பல்கலைகழகத்தின் உண்மை நிலவரத்தை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெளியிடவில்லை.

குறித்த பல்கலைக்கழகத்தில் முழு தென்னாசியாவிற்கே தேவையான குண்டுதாரிகள் உருவாக்கப்படுகின்றனர்.

இப் பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதி அனைத்தும் சவூதி அரேபியாவில் உள்ள செல்வந்தர்களே நிதியுதவி வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு