உள்நாடு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து – மௌலவி ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை (16) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பிரயாணித்த பேருந்து கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இதில் மோட்டார் சைக்கின் பின்பகுதியில் பயணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

-சரவணன்

Related posts

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு