உள்நாடு

மக்கள் விரும்பினால் தொடர்ந்தும் ராஜபக்சவே நாட்டை ஆட்சி செய்வார்

(UTV | கொழும்பு) –மக்கள் விரும்பினால் தொடர்ந்தும் ராஜபக்சவே நாட்டை ஆட்சி செய்வார்

இந்நாட்டு மக்கள் ராஜபக்சவை விரும்பினால், ராஜபக்சவே நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக இளைஞர் பிரதிநிதித்துவத்தை முன்வைக்க தாம் நம்புவதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடு திரும்பியுள்ள பஷிலிற்கும் , ஜனாதிபதியிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம்

அஜித் பிரசன்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்