உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் மறவையொட்டியே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார பீடத்தின் போதே இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

2022ஆம் வருடம், டிசம்பர் மாதம் இடம்பெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டின் போதே, வை.எல்.எஸ். கட்சியின்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன்னர் சுமார் 08 வருடங்களாக சுபைர்தீனே செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

 

படம் : YLS.ஹமீட் செயலாளராக நியமிக்கப்பட்ட போது – டிசம்பர் 2022

 

Related posts

ஜூன் 15 : பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு