அரசியல்உள்நாடு

மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது – திலித் ஜெயவீர எம்.பி

ஜே.வி.பி தற்போது அதன் சொந்த மக்களிடமிருந்தே ஒரு சவாலை எதிர்கொள்கிறது என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொழில்முனைவோர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

அவர்கள் இப்போது எல்லாவற்றையும் மாயைகளால் மறைப்பதாக திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

தாயக மக்கள் கட்சி தலைமையகத்தில் இன்று (24) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோருமான திலித் ஜெயவீர இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து திலித் ஜெயவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஒருவருக்கு மட்டுமே வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர, எல்லாம் மாதிவெலவில்தான் உள்ளது என்கிறார்.

அவர்கள் வாகனங்களில் பாராளுமன்றத்திற்கு வருவதை நானும் பார்க்கிறேன். ​பெட்டிக் கடையில் 2,000 ரூபாய்க்கு ஒரு பெக்கெட் அரிசி வாங்கினாலும் மூன்று வேளை சாப்பிட முடியாது.

பிமல் ரத்நாயக்க கூறியது போல், செலவுக்கு ஏற்ற கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். 2000 ரூபாய் என்பது செலவு இல்லை.

நான் அந்த புஃபேவைப் பார்த்திருக்கிறேன்.
“நாம் ஒரு துல்லியமான கணக்கீட்டைச் செய்ய வேண்டும், மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று நான் சொல்கிறேன்.”

Related posts

தடம்புரண்ட பொடி மெனிகே!

சனியன்று நுகேகொடையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!