வகைப்படுத்தப்படாத

மகிந்த ராஜபக்ஷவை மகிழ்ச்சியடைய வைத்துள்ள விடயம்!!

(UDHAYAM, COLOMBO) – ஊவ வெல்லஸ்ஸ புரட்சியின் போது தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசத்துரோகிகள் என்று வெள்ளையர்களால் அறிவிக்கப்பட்ட அனைவரும் இன்று தேசிய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இது மகிழ்ச்சியளிக்கின்ற விடயம்.

இதேபோல அவர்களிடம் இருந்து கைவிட்டுப் போன பரம்பரை சொத்துக்கள் மீள கையளிக்க வழிச் செய்யப்பட வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவை இல்லை

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

வடமாகாண சபையின் விசேட அமர்வு..