விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் அணியை மீளழைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இவ்வாறு கலந்துரையாடி வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது வரை இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் 7 பேருக்குக் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணியின் வீரர்கள் 6 பேருக்கும், அதிகாரியொருவருக்குமே இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மகளிர் கிரிக்கெட் அணியை நாட்டுக்குள் அழைத்து வருவது தொடர்பில் இன்று (28) பிற்பகல் வேளையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

போட்டியின் திருப்புமுனை, தந்தை குறித்து தனஞ்சய கருத்து…

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வாகன விபத்தில் பலி

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்