உள்நாடு

போலி வேலை வாய்ப்பு பணியகத்தினை சுற்றி வளைத்தது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

(UTV | கொழும்பு) – போலி வேலை வாய்ப்பு பணியகத்தினை சுற்றி வளைத்தது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

ராஜகிரியவில் இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை,   (S.B.F.E.) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக  அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்து அதன் உரிமையாளரையும் மற்றுமொரு நபரையும் பணியகத்தின் விதிமுறைகளை மீறி வேலையாட்களை நேரகானால் நடத்தும் போது கைது செய்துள்ளது.

இவ்வாறு நேர்காணல் நெதர்லாந்தில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்களில் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வரை 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்கு வந்துள்ளனர்.

(1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன் அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை அழைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ முடியாது).

குறித்த வேலை வாய்ப்பு நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும், நெதர்லாந்தில் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக ரூ.5,000 முற்பணம் பெறப்பட்டுள்ளதாகவும் S.B.F.E. தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக சோதனையைத் தொடர்ந்து, நேர்காணலுக்கு வந்த நபர்கள் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்களைத் தாக்க முயன்றுள்ளனர். இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராஜகிரிய பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றிவளைப்பின் போது விசாரணை அதிகாரிகள் 200 கடவுச்சீட்டுகள், 403,080 ரூபா பணம் மற்றும் வேலை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பிற ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹல்ட்ஸ்டோர்ஃப் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கு 2023 ஜனவரி 25 ஆம் திகதி மேலும் விசாரணைக்கு எடுத்துக் கொல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]

ஒரு வாரத்தினுள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை